வனிதாவிடம் ஒன்டிக்கு ஒன்டி மல்லு.. ஷெரின் – தர்ஷன் ரொமான்ஸ் கலாட்டா..!


பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்றும் மற்றவர் கருத்தைக் கேட்காமல் சண்டை போடுவது என்று வழக்கமாகச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார்.

மேலும் இவரின் பேச்சை தட்டி கேட்க ஏன் ஒருத்தர் கூட முன் வரவில்லை? என்று ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அந்த வீட்டிலிருந்து அவரை கேள்வி கேட்க முதல் முறையாக தர்ஷன் முன் வந்துள்ளார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் தர்ஷன், ‘அவள் வாய்ஸ் அதிகமாக பேசினால், நான் அடங்கிப் போக வேண்டும் என்று நினைக்கிறாள்’ என்று சொல்ல உடனே கவின் மற்றும் ஷெரின் தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். பின்பு ஷெரின், தர்ஷனிடம் வந்து உனக்கு கோபம் வருகிறதா என்று கேட்க, யாராவது ஒருத்தராவது தட்டி கேட்க வேண்டும் என்று கூறுகிறார். பின்பு இருவரும் நடந்து செல்கின்றனர். அப்போது ஷெரின் உனக்கு இந்த நேரத்திலயும் ரொமான்டிக்காணுமா என்று கேட்டு சிரித்து மகிழ்வது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் வனிதாவிடம் முதல் முறையாக எதிர்த்துக் குறித்து தர்ஷனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.-Source: top.tamil

4 நாளில் இந்த கொடூரமான பாதவெடிப்பை கூட சரிசெய்யும் இரண்டு பொருள்கள் இவைதான்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!