காப்பாற்றப்பட்ட வனிதா… இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது இவர் தான்?


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வனிதா என்றதுமே ரசிகர்கள் வனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டிருப்பதால் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார் பிக் பாஸ்.

நேற்றைய நிகழ்ச்சியில் வனிதாவிற்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு அதை அவர் வெற்றிகரமாக முடித்தபின்னர் அவருக்கு சூப்பர் பவர் ஒன்றை அளித்துள்ளார் பிக் பாஸ். அதாவது வனிதா அடுத்த வாரம் தலைவர் பதவிக்கு நேரடியாகப் போட்டியிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.


அதேபோல் சாக்ஷிக்கும் இந்த சூப்பர் பவர் அளிக்கப்பட்டது. இதனால் வனிதா இந்த வாரம் நிச்சயம் காப்பாற்றப்பட்டு அடுத்த வாரமும் பிக் பாஸ் வீட்டுக்குள் தாக்குப்பிடிப்பார்.

இதனால் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் இந்த வாரம் மோகன் வைத்யா தான் வெளியேற்று படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எலிமினேஷன் என்றதும் சோகமாகவும் கோபமாகவும் சுற்றி திரியும் மோகன் வைத்யா ஒருவேளை இந்த வாரம் வெளியேற்றப்பட்டால் நிச்சயம் வீட்டில் கதறல் சத்தத்திற்குப் பஞ்சமிருக்காது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!