பிக்பாஸ் வீட்டில் என் மொத்த ஓட்டும் இவருக்கு தான்.. ஆதாரத்துடன் வெளியிட்ட ரியோ..!


பிக் பாஸ் வீட்டில் என்னுடைய மொத்த ஓட்டும் இவருக்கு தான் என ரியோ ஓபனாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விருவிருப்படைந்து கொண்டே வருகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவார்கள், அதே போல் இந்த வாரம் வெளியேற்றப்படலத்திற்காக நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, சரவணன், மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் வனிதா தான் வெளியேற வேண்டும் என்ற எண்ணம் தான் பெரும்பாலான மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் மோகன் வைத்யாவை தான் பிக் பாஸ் வெளியேற்றுவார் என தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான ரியோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய மொத்த ஓட்டும் சித்தப்பு சரவணனுக்கு தான் என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!