பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை இவர்தானா? புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!


பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். அவர் மிகவும் ஜாலியாக சுற்றி திரிகிறார். மேலும் அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.


இதனை தொடர்ந்து லாஸ்லியா குறித்த பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் லாஸ்லியா பிக்பாஸ் டாஸ்க் ஒன்றில் 10 ஆண்டுகளாக தனது தந்தையை பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை இவர்தான் என கூறி புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அவரை குறித்த சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது அதாவது அந்த புகைப்படத்தில் உள்ளவர் லாஸ்லியாவின் தந்தை இல்லை என்றும், அவர் காண்டீபன் தொலைக்காட்சி ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!