அய்யோ வலிக்குதே.. முதுகு வலிக்குதே… நீதிபதி முன்பு சீன் போட்ட ராஜகோபால்


அய்யோ வலிக்குதே, முதுகு வலிக்குதே என ஸ்டெச்சரில் படுத்துக் கொண்டு நீதிபதி முன்பு குரல் எழுப்பினார் சரவணபவன் ராஜகோபால்.

ஜாதகம், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கையுடையவர் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால். இவரது தொழிலில் சில சறுக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்டார். அப்போது சிறிய வயது பெண்ணை 3-ஆவதாக திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்வில் வளம் பெறுவீர்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து தனது ஹோட்டலில் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டார் ராஜகோபால். எனினும் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் விடாத அண்ணாச்சி சாந்தகுமாரை கடந்த 2001-ஆம் ஆண்டு கடத்தி சென்று கொடைக்கானலில் கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கில் ராஜகோபால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையும் எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ராஜகோபாலோ தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் உள்ளதாக கூறி சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியோ ராஜகோபாலுக்கு சுளீர் கேள்விகளை கேட்டு அவர் உடனடியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தார்.

அப்போது ஸ்டெச்சரில் படுத்துக் கொண்டிருந்த ராஜகோபாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அச்சமயம் ராஜகோபால், அய்யோ வலிக்குதே.. அய்யய்யோ வலிக்குதே.. முதுகு வலிக்குதே என கூறி சிம்பதி கிரியேட் செய்தார். எனினும் அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!