பள்ளிச் சிறுமிக்கு ஆட்டோ டிரைவரால் ஏற்பட்ட பயங்கரம்! பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை…!


ஷேர் ஆட்டோவில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவமானது ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே மல்லிகை தோப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யகரசி என்ற மகள் உள்ளார். இவர் ஆரம்பப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் இவர் தம்பி லோகேஷ்வரணும் கார்த்திக் என்பவரின் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு செல்கின்றனர்.

கார்த்திக் 15 குழந்தைகளை ஷேர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தினமும் பள்ளிக்கு சென்று விடுகிறார். இதில் திவ்யகரசியை தன் இருக்கையில் அமர வைத்து அழைத்து சென்றார். அப்பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. அவ்வழியாக ஷேர் ஆட்டோ சென்றபோது பள்ளத்தில் ஏறி இறங்கியது. எதிர்பாராவிதமாக இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த திவ்யகரசி பிடிப்பை இழந்து கீழே விழுந்துள்ளார்.

பள்ளத்தினுள் விழுந்ததால் திவ்யகரசிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. உயிருக்குப் போராடிய நிலையில் அவரை அருகிலிருந்து அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் சடலத்தை பார்த்து அழுத பெற்றோரின் அவலக்குரல் காண்போர் நெஞ்சை உருக வைத்தது.

ஷேர் ஆட்டோ ஓட்டும் விதிமுறைகளை மீறிய குற்றத்தில் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். ஷேர் ஆட்டோவில் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள், அவர்கள் எவ்வாறு பள்ளிக்கு செல்கின்றனர் என்பதை கண்காணிப்பது இல்லை. மேலும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் பணத்திற்காக அதிகமான பிள்ளைகளை வண்டியில் ஏற்றி செல்கின்றனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த சம்பவமானது ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!