மீரா மிதுனிடம் மன்னிப்பு கேட்ட சேரன்… எதுக்கு இப்படி – வீடியோவை பாருங்க.!


பிக் பாஸ் 3 யின் இன்றைக்கான புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஒரே சண்டையும் சச்சரவுமாக உள்ளது. இதனால் பிக் பாஸ் சீசன் 3 ஹாட்டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் சண்டை இல்லாமல் டாஸ்க் மூலம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். அதற்குள் யாரு கண் பட்டுதோ என்று தெரியவில்லை மீண்டும் மீன் கடை போல் பிக் பாஸ் ஹவுஸ் மாறிவிட்டது.

ஆம்…இன்றைக்கான முதல் புரோமோவில் அது போன்று காட்டப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது வழக்கம் போல் மீரா சக போட்டியாளருடன் சண்டை போட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இந்த வாரம் முதல் பலியாடாக மாட்டியது சேரன் தான்.

மீரா, சேரனை பார்த்து, ‘நான் வேலை செய்யவில்லை’னு ஒரு வார்த்த விட்டீங்க, அது மாறி என்ன தப்ப கேமரா முன்பு காமிகாதிங்க’ என்றார். அவரின் குணத்தை புரிந்து கொண்ட சேரன், ‘நான் பேசினது தப்பு தான்’ என்று பேச்சை முடித்துக் கொள்கிறார். ஆனால் அம்மணி அப்படியே விடுவாங்களா….. விடாமல் சேரனை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பது போல புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!