நாமினேஷன் லிஸ்டில் வனிதா… ட்ரெண்ட் செய்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


நாமினேஷன் லிஸ்டில் வனிதா விஜயகுமார் இடம் பெற்றிருப்பதை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் வனிதா விஜயகுமாரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளே சென்றுள்ள வனிதா பயங்கரமான அளவில் ரவுடி தனத்தை வெளிக் காட்டி வருகிறார். ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்.

இவரை ஒரே வாரத்திற்குள்ளாகவே மக்கள் மிகவும் வெறுத்து விட்டனர். வனிதா விஜயகுமார் நாமினேஷன் லிஸ்டில் வர மாட்டாரா? என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே 7 ஓட்டுகள் பெற்று வனிதா விஜயகுமார் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார்.

இதனை ரசிகர்கள் #Vanitha #VanithaVijayakumar ஆகிய ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டாக்கியுள்ளனர். இந்த ஹேஸ்டேக்கில் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!