பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக குழந்தை கடத்திய வனிதா..? முன்னாள் கணவர் ஆனந்தராஜ் பரபர பேட்டி..!


என் குழந்தையை இன்று மாலை ஒப்படைக்காவிட்டால் வனிதாவை கைது செய்ய வைப்பது உறுதி என அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் தொழிலதிபர் ஆனந்தராஜ்க்கும் 2007 ஆம் ஆண்டு திருமணமாகி 2012ல் விவாகரத்து ஆனது.

விவாகரத்துக்கு பின் தொழிலதிபர் ஆனந்தராஜுடன் வசித்து வந்த மகள் ஜெனிதாவை(10) கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வனிதா கடத்தியதாக தெலுங்கானா காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார்.

இதுகுறித்து வனிதா விஜயகுமாரின் ஆனந்தராஜ் கூறுகையில், வனிதா பிக்பாஸ் வீட்டில் இருப்பது தெரிந்து நாங்கள் இங்கு வந்தோம். எங்களுக்கு நன்றாக தெரியும் அவர் இங்குதான் உள்ளார் என்பது. 4 முதல் 5 மாதங்களாக நாங்கள் தேடினோம். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

தெலுங்கானா போலீஸாருடன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தோம். வனிதாவிடம் போலீஸார் பேசினர். அவரும் குழந்தையை இன்று மாலை காண்பிப்பதாக ஒப்புக் கொண்டார். உடன் வனிதாவின் வழக்கறிஞரும் இருந்தார். குழந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்துவர். மேலும் குழந்தையை ஏதேனும் மிரட்டி வைத்தனரா என்பது குறித்தும் விசாரணை நடத்துவர்.

பிக்பாஸ் டீம் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். சீல் ரூம் என்பதெல்லாம் பிக்பாஸ் செய்யும் டிராமா. எனது வழக்கறிஞரும் மனித உரிமை ஆணைய அதிகாரிகளும் போலீஸாருடன் சென்று வனிதாவை சந்தித்தனரே.

வனிதாவின் வழக்கறிஞர்தான் அவரிடம் ஏதோ கோர்ட் ஆர்டர் இருப்பதாக கூறி குழந்தையை அழைத்து வர வைத்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் குழந்தையை நான்தான் பராமரித்து வருகிறேன். வனிதாவுக்கு என்னுடைய வீடு நன்றாக தெரியும். அவர் என் வீட்டுக்கே வந்து குழந்தையை பார்த்திருக்கலாம்.

ஆனால் இத்தனை ஆண்டுகளாக இல்லாத அக்கறை இப்போது திடீரென வந்ததற்கு காரணம் பிக்பாஸில் வெற்று விளம்பரம் தேடி கொள்ளத்தான். தானும் ஒரு தாய் என்றும் குழந்தையை விட்டுவிட்டுதான் இங்கு வந்தேன் என்றும் விளம்பரம் செய்து கொள்ளவே குழந்தையை அழைத்து வந்துள்ளார்.

அவரை விட குழந்தையை நான்தான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றும் என் வாழ்வில் இனி குறுக்கே வரமாட்டேன் என்றும் வனிதா எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் என்னிடம் உள்ளன. பிக்பாஸில் நான் ஒரு தாய் என அடிக்கடி கூறும் வனிதா இத்தனை ஆண்டுகள் எங்கே போனார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் சென்னைக்கு வந்து வனிதாவை தேடி வருகிறோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அறிந்து நாங்கள் இங்கு வந்தோம். இன்று மாலை குழந்தையிடம் விசாரணை நடத்தி என்னுடன் குழந்தை வருவதாக கூறியும் வனிதா விட மறுத்தால் அரெஸ்ட் வாரண்ட வாங்கி வனிதாவை கைது செய்ய வைப்போம் என்றார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!