பிக்பாஸ் வீட்டில் அண்ணன்… சாதனை படைத்த ராஜேஷ் வைத்யா..!


வீணை வாசிப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற ராஜேஷ் வைத்யா, தற்போது தனது குழுவினருடன் ஆசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார்.

வீணை வாசிப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் ராஜேஷ் வைத்யா. பிரபல இசையமைப்பாளரான ஜி.ராமநாதன் இவரது பெரியப்பா ஆவார்.

ராஜேஷ் வைத்யா, தனது குழுவினருடன் 60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகளை வாசித்து, ஆசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார்.

தனியார் ஓட்டலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆசிய நாடுகளின் தேசிய சாதனையாளர்களை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்காக, ‘ஆசிய சாதனையாளர்களை அங்கீகரித்து வருகிறது.

இதில் ஆசிய நாடுகளான இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வியட்நாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இண்டோசீனா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லாவோஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நேபால் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய தேசிய சாதனையாளர்கள், தங்களை ஒப்பிட்டு, போட்டியிட்டு, ‘ஆசிய சாதனையாளர்’ அந்தஸ்துக்கு தங்களை உயர்த்தி கொள்வதற்கு இது அடித்தளமாக அமைந்திருக்கிறது.

ராஜேஷ் வைத்யாவின் ஒரு மணி நேரத்தில் 60 பாடல்கள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா, நடிகை சுகாசினி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!