எனக்கு பிடித்தது இவங்களதான்… பிக்பாஸ் 3 பற்றி மனம் திறக்கும் மைனா…!


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை மைனா.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகிய 15 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றுள்ளார். ஒவ்வெருவரும் தங்களது வெற்றிக்காக பிக்பாஸ் இல்லத்திற்குள் கொடுக்கப்படும் டாஸ்குகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான மைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் லாஸ்லியா என்று தெரிவித்துள்ளார்.

லாஸ்லியா இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் ஆவார். இவர் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்த முதல் நாளில் இருந்தே இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் அதிகரித்து வருகிறது.

மேலும் பிக்பாஸ் முதல் சீசனின் ஓவியாவிற்கு உருவாகும் ஆர்மி அடுத்ததாக லாஸ்லியாவிற்கும் உருவாகும் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.-Source: news18

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!