அரசியலில் அம்மணமாக நிற்கிறார் தினகரன்.. நாஞ்சில் சம்பத் ஆவேசம்


அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த, தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, அரசியல் பிரமுகரும், திமுக ஆதரவாளருமான, நாஞ்சில் சம்பத் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுகவை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு பிரச்சனை, மும்மொழிக் கொள்கை பிரச்சனை, ஹைட்ரோகார்பன் விவகாரம் உட்பட அனைத்திலும் திமுகதான் தமிழர்களுக்காக போராடி வருகிறது.

அதிமுகவை பொறுத்தளவில் பாஜகவின் ஒரு அங்கமாக செயல்படுகிறது. விரைவிலேயே அது தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டுவிடும். அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்கப்போவதில்லை. எனவே தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக செல்லாமல் திமுக சென்று நல்ல முடிவை எடுத்துள்ளார்.

திமுகவில் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் கூட தேனி மாவட்டத்தில் பெரும் செல்வாக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி எதற்காக இயங்குகிறது என்றே தெரியாது. எந்த கொள்கையும் இல்லாமல் சிலர் மட்டும் அங்கே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

அரசியலில் தினகரன் இப்போது அம்மணமாக நிற்கிறார். இவ்வாறு நாஞ்சில் சம்பத் அதிரடி கருத்துக்களை எடுத்துரைத்தார். அதிமுக பிளவுபட்டபோது, தினகரனுக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் தற்போது கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு, “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, நான் தினகரனிடம் இருந்து விலகிவிட்டேன். அவருக்கு எந்த ஒரு கொள்கையும் கிடையாது. கொள்கையை சொல்லி கொடுத்ததே நான்தான். அவர்தான் ஏற்கவில்லை” என்று பதிலளித்தார் நாஞ்சில் சம்பத்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!