சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறிய நிர்மலா தேவி – கோர்ட்டில் ஆஜர்..!


சுடிதார் போட்ட நிர்மலாதேவியை பார்த்திருக்கீங்களா… இதோ பாருங்க. இவர்தான் இதுநாள் வரை நாம் பார்த்த பேராசிரியை! சுடிதாரும், மல்லிகைப்பூ மணத்துடன் இவர் வலம் வந்ததை யாருமே சரியாக கவனித்திருக்க மாட்டார்கள்!

கடந்த ஒரு வருடமாக ஜெயிலுக்கும் கோர்ட்டுக்கும் அலையாய் அலைந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. ஒவ்வொரு முறை வரும்போதும் அவருடன், போலீசார் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் திரண்டு வருவார்கள். மீடியாக்கள் அவரிடம் நெருங்கி பேசவே முடியாது.

பின்னர் இந்த விஷயத்தில் கோர்ட் நேரடியாக தலையிட்டு நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைக்க வழி பிறந்தது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டு இருப்பதால், அடிக்கடி ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டுக்கு வந்து போகிறார்.

நேற்றுகூட கோர்ட்டுக்கு வந்திருந்தார் நிர்மலாதேவி. அவருடன் இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜரானார்கள். பின்னர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஜூலை 1ஆம் தேதி இந்த வழக்கில் உள்ள தடை ஆணை குறித்த விசாரணை வருகிறது என்றார்.

இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 8-ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் வழக்கு விசாரணையில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


3 கட்டை பைகளுடன் ஜெயிலை விட்டு வெளியே வந்த நிர்மலாதேவியைதான் பெரும்பாலானோர் காண முடிந்தது. ஆனால் இதற்கு பிறகு அவரது தோற்றம் ஒரேயடியாக மாறி போனதை யாரும் சரியாக கவனித்திருக்க முடியாது. ஒவ்வொரு முறை வரும்போதும் நிர்மலாதேவியின் நடை, உடை, பாவனையில் நிறையவே சேஞ்ச் தெரிகிறது.

அழுது வடிந்து கொண்டிருக்கிற சோக முகம் இல்லை. பளிச் புன்னகையுடன் காணப்படுகிறார். அடுத்ததாக, காட்டன்சேரி, மல்லிப்பூ, ஹேண்ட் பேக் சகிதம் காணப்பட்டார். ஆனால் நேற்று இதைவிட வேற லெவலில் காட்சி அளித்தார். சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்தார்.

அதுவும் அந்த சுடிதார் காம்பினேஷன் பார்க்கவே செமயாக இருந்தது. எப்பவுமே அணிந்திருக்கும் கண்ணாடி மிஸ்ஸிங்! ஆனால் தவறாமல் கமகம மல்லிப்பூ தலையில் சிரித்து கொண்டிருந்தது. கழுத்தில் முத்துமாலை மின்னியது.

செல்போன் பேசிக் கொண்டே நிர்மலாதேவி, கோர்ட்டை விட்டு வெளியே வரும்போது, இது யாரு.. புதுமுகம் போல இருக்கே என்ற ரேஞ்சுக்கு பளபளவென இருந்தார். ஆடை, அணிகலன்கள் அணிவது எல்லாம் ஒருவரது தனிப்பட்ட உரிமை, விருப்பம் என்றாலும், அழுதுவடிந்து, வெளிறி காணப்பட்ட நிர்மலாவா இது என்ற ஆச்சரியம் நம்மையும் அறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொண்டது!

இந்த வழக்கில் நிர்மலாதேவி குற்றவாளியா, நிரபராதியா என்பதை நீதிமன்றம் பார்த்து கொள்ளும் என்றாலும், கடைசி வரை இந்த வழக்கில் உண்மையான முகம் வெளியே வராமல் போய் விடுமே என்பதுதான் நமக்கு கவலையாக உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!