காதலியின் வீட்டிற்கு களவாக சென்ற காதலனை பிடித்து மொட்டையடித்த கிராம மக்கள்..!


ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் மண்டுவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் பரவலாக பேசத் தொடங்கினர்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி அந்த நபர், தன் காதலியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த ஊர் மக்கள், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி பொதுமக்கள் முன்னிலையில் இருவரின் தலையையும் மொட்டையடித்து அவமானப்படுத்தி உள்ளனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி நாராயண் நாயக் கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!