நிலத்தை ஜப்தி செய்து விடுவோம்.. வங்கி ஊழியர்களின் மிரட்டலால் விவசாயி தற்கொலை..!


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குமணன் தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 56). விவசாயி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தேனியில் உள்ள தனியார் வங்கியில் தனது 3 ஏக்கர் நிலத்தை அடமானமாக வைத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றிருந்தார்.

விவசாயம் பொய்த்ததால் தவணைத் தொகையை முறையாக செலுத்த முடியவில்லை. இதனால் கடன் தொகை முழுவதையும் வட்டியுடன் சேர்த்து உடனடியாக கட்ட வேண்டும் எனவும் இல்லையெனில் நிலத்தை ஜப்தி செய்து விடுவோம் எனவும் வங்கி ஊழியர்கள் ஜெயக்கொடிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜெயக்கொடி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்கொடி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!