ஒரு நன்றி கூட போடல… அப்போ எனக்கு புத்தியில்ல.. அண்ணனுக்காக வக்காலத்து வாங்கிய தம்பி..!


தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் தனது பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று இளையராஜா கூறியதில் தவறு இல்லை என்கிறார் கங்கை அமரன்.

தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்துபவர்களை இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் விளாசினார். இதை பார்த்த 96 படக்குழுவை சேர்ந்த ஒருவரோ இளையராஜாவுக்கு ராயல்டி கொடுத்த பிறகே அவரின் பாடல்களை பயன்படுத்தியதாக ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து அவரின் தம்பி கங்கை அமரன் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

பெரிய ஞானிகள் சொல்லும்போது அதை பேசாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. அந்த காலத்தில் நாம் இளையராஜா மாதிரி இசையமைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து இசையமைப்பது நல்லது தானே. இளையராஜா பாடல்களை பயன்படுத்துகிறோம், நன்றி என்று கார்டு போட்டுவிட்டு, அவர் கேட்கும் ராயல்டியை கொடுத்துவிட்டு பாடல்களை தாராளமாக பயன்படுத்தலாம். அப்படி நன்றி தெரிவித்து கார்டு போடுவதற்கு என்ன?. அந்த நன்றி உங்களுக்கு இல்லை.

90களில் கதை கொண்ட அந்த படம் நன்றாக ஓடியது என்கிறீர்களே, நன்றி கெட்ட மாந்தரடா என்று பாடும்படி உள்ளது. ஒரு இசையமைப்பாளர் எந்த பீரியடில் கதை அமைகிறதோ அதற்கேற்ப பாடல்களை போட வேண்டும் என்று சொல்வதில் தவறு இல்லை. இந்த மாதிரி ஒரு சிந்தனையை வளர்த்துக்கோ என்று சொல்வதில் தவறு இல்லை.

இளையராஜா அனுமதி இல்லாமல் அவர் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆதரிக்கிறேன். முன்பு காப்புரிமை பிரச்சனை எழுந்தபோது இளையராஜாவுக்கு எதிராக நான் இருந்ததற்கு காரணம் அப்பொழுது எனக்கு புத்தி இல்லை.

யோசித்து பார்த்தால் நான் கட்டிய வீட்டில் குடியிருந்து கொண்டு என்னடா வாடகை தர மாட்டேன் என்கிறீர்களே என கேட்பது சரியாகத் தான் உள்ளது. அப்படி பேசியபோது அண்ணன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்கிறார் கங்கை அமரன். ராயல்டி பிரச்சனையால் பிரிந்த இளையராஜாவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் மீண்டும் ஒன்று சேர்ந்ததில் மகிழ்ச்சி என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!