ட்ரம்பின் கண்முன்னே மெலனியாவின் அழகில் வழிந்த பிரித்தானியர்!


இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற 93 வயதான பிரித்தானிய வீரர், மெலனியாவின் அழகை அவருடைய கணவர் ட்ரம்ப் கண்முன்னே வர்ணித்துள்ளார்.

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்திலுள்ள டி-டே 75 நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா (49), இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்கள் பலரையும் சந்தித்து பேசினர்.

அப்போது 93 வயதான தாமஸ் குத்பெர்ட் என்கிற முன்னாள் வீரர், மெலனியாவின் கையை பிடித்து குலுக்கியபடியே அறிமுகமானார்.

மெலனியா நன்றாக இருக்கிறாள் என அதிபரை நோக்கி கூறியவர், இவள் மட்டும் உங்களுடையதாக இல்லை என்றால், அதேசமயம் நானும் 20 வயதுடையவனாக இருந்தால்… என கூறிக்கொண்டே சிரித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ட்ரம்ப், இதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக நீங்கள் கையாள முடியும் என சிரித்தபடியே பதில் கொடுத்துள்ளார்.

மேலும் பேசிய குத்பெர்ட், ட்ரம்ப் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் அவர் வித்யாசமாக இருந்தார். அவருடைய மனைவி மிகவும் இனிமையானவர் என கூறினார்.-Source: lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!