தமிழகத்தில் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்த திருவள்ளூர் மாணவி பேட்டி..!


மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவி சுருதி 685 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளார். மேலும் இந்திய அளவில் 57-வது இடத்தை இவர் பெற்று உள்ளார்.

திருவள்ளூர் மணவாள நகர் பகுதியை சேர்ந்த மாணவி சுருதியின் தந்தை கோவிந்தராஜ் மற்றும் தாய் கோமதி ஆகியோர் டாக்டர்களாக உள்ளனர்.

இதுகுறித்து மாணவி சுருதி நிருபர்களிடம் கூறியதாவது:-

திரும்ப திரும்ப படித்தேன்

‘நீட்’ தேர்வு எளிதாக இருந்ததால் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற முடிந்தது. 10, 11, 12-ம் வகுப்பு பாடங்களை திரும்ப திரும்ப படித்ததால் அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது.

மேலும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சென்று படித்ததால் ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்தது. எனக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் முழு ஒத்துழைப்பு நல்கினர்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!