கிட்னி தானம் செய்தால் ரூ.3 கோடி – தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி..!


சிறுநீரக தானம் செய்தால் 3 கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறி அதற்காக பதிவுக் கட்டணம் பெற்று தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது.

தங்கள் மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டுமென ஈரோடு தனியார் மருத்துவமனை சார்பில் காவல் துறையிடம் புகார் தரப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரபாகர் அளித்துள்ள புகார் மனுவில், சிறுநீரக தானத்திற்கு அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி, தங்கள் மருத்துவமனை பெயரை பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரகம் தானம் செய்தால் 3 கோடி ரூபாய் வரை தருவதாகவும், அதற்கு பதிவு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் எனவும் வாட்ஸ் அப் மூலமாக மோசடி செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் சரியான முகவரியை கொண்டு போலியாக பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்றும் மருத்துவர் பிரபாகர் கூறியுள்ளார்.

தங்கள் மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி தவறான தொலைபேசி எண் மற்றும் வங்கிக்கணக்கு மூலம் பண மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களின் மருத்துவமனையின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி அப்பாவி நபர்களிடம் பணம் பறிக்கும் கூட்டத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.-Source: puthiya.thalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!