தாம்பத்தியத்தின் போது ஆண்களுக்கு வலி ஏற்படக் காரணம் என்ன?


சிலருக்கு உடலுறவில் ஈடுபடும்போது வலி உண்டாகலாம். இதற்கு காரணம் அவர்கள் தாங்கள் ஈடுபடும் நிலை அல்லது முறை சரியில்லையோ என கருதுவதும் உண்டு.

ஆனால், பல சமயங்களில் இவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவதற்கு காரணம் உடல்நலக் கோளாறுகள் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிறுநீர் பாதை நோய் தொற்று, ஈஸ்ட் தொற்று, சொரியாஸிஸ் போன்ற உடல்நலக் கோளாறுகளின் காரணங்களால் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம் என உடலியல் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.

எனவே, தொடர்ந்து உடலுறவில் ஈடுபடும்போது ஆண்குறியில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

யூ.டி.ஐ என்பது சிறுநீர் பாதை நோய் தொற்று ஆகும். இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கூட ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கான சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

ஈஸ்ட் தொற்று என்பது பெண்களிடம் இருந்து பரவுவது. நீங்கள் உடலுறவுக் கொள்ளும் துணைக்கு இந்த ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தால் அதன் மூலம் ஆண்களுக்கு பரவி உடலுறவில் ஈடுபடும் போது வலியை உண்டாக்கலாம்.


சருமத்தில் உண்டாகும் சொரியாஸிஸ் காரணமாக கூட ஆண்மை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம். இதனால் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில ஆண்களுக்கு சோப்பில் கலக்கப்படும் கெமிக்கல் சேராது. இதனால் ஏற்படும் அழற்சியினால் கூட பிறப்புறுப்பு பகுதியில் வலி உண்டாகலாம்.

ஒரு வகையான பால்வினை நோய் தாக்கம் இந்த ஹெர்ப்ஸ். இது உடலுறவில் ஈடுபடும் போது வலியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, துணைக்கும் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

ஆண்குறியின் மேல்தோல் மிக இறுக்கமாக இருந்தாலும் கூட உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கு மேல்தோல் நீக்க அறுவை சிகிச்சை உகந்தது.

மேலும் இஸ்லாமியர்கள் இதனை சுன்னத் என்று அழைப்பர். இதனால் பூஞ்சை காளான் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதுடன் உறவில் சுகம் அதிகரிக்க வாய்ப்புண்டு.

சிலருக்கு விந்து வெளியேறும் முன்னர் சிறுநீர் போன்ற மெலிதான திரவம் சுரக்கக் கூடும். இதன் பெயர் பிரீ கம். இதிலும் விந்தணு இருக்கும். எனவே கர்ப்பத்தை தடுக்க ஆணுறை அணிவது நல்லது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!