முலாயம் சிங்கிற்கு ஓட்டு போடாததால் கிராம மக்களை அடித்து உதைத்த கும்பல்

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றார். அவர் 94 ஆயிரத்து 389 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பிரேம்சிங் ஷக்யாவை தோற்கடித்தார்.

இந்நிலையில், மெயின்புரி தொகுதிக்குட்பட்ட உன்னாவ் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை நேற்று யாதவ சமூகத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். முலாயம் சிங்கிற்கு ஓட்டு போடாததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, காவல்துறை அதிகாரிகளுக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தாக்குதல் நடந்த கிராமத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.