உலககோப்பை சீருடையில் அதிரடி மாற்றம் – காவி நிற சீருடையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்..!


இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இதுவரை நீல நிற உடை அணிந்து விளையாடி வந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில் சில அணிகளுடன் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் அணிந்து இனி விளையாடப் போகிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணி வரும் ஜுன் மாதம் 5ம் தேதி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை இரு அணிகளும் ஒரே சீருடையில் விளையாட ஐசிசி அனுமதி மறுத்துள்ளது. அதற்கு பதில் மாற்று நிற சீருடையை தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது. என்ன நிறம் என்பதை அந்த நாடுகளே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியா, இங்கிலாந்து,இலங்கை, ஆப்கானிதான் உள்ளிட்ட நாடுகள் நீல நிற உடையில் விளையாடி வந்தன. இனி இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் விளையாடும் போது மாற்று உடையில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய அணி ஆரஞ்சு நிற உடையில் விளையாட முடிவு செய்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்,வங்கதேசம் ஆகிய நாடுகள் பச்சை நிற உடை அணிந்து விளையாடி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா, வங்கசேம் அணிகள் மட்டும் வேறு உடை அணிந்து விளையாட உள்ளன.

இந்திய அணி வரும் ஜூன் 22ம் தேதி நடக்கவுள்ள ஆஃப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியிலும், ஜூன் 30ம் தேதி நடக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியிலும் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்பு உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!