இலங்கையிலிருந்து தப்பி 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்..!


இலங்கையில் தப்பிய 15 ஐ.எஸ். ஐ.எஸ் இயக்க பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்களை நடத்தி கோர சம்பவத்தை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதையடுத்து அந்நாட்டில் ஐ.எஸ். இயக்க முகாம்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது 15 தீவிரவாதிகள் தப்பி கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கேரளா கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!