பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீருடன் அறிவித்தார் தெர்சா மே..!


பிரெக்சிட் விவகாரத்தில் ஒப்புதல் பெற முடியாததால் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் விவகாரத்தில் ஒப்புதல் பெற முடியாததால் தனது பிரதமர் பதவியை ஜூன் 7ம் தேதி ராஜினாமா செய்யவுள்ளதாக தெரசா மே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற மே 22ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஒப்புதல் பெற முடியாததால் தெரசா மே இந்த முடிவை எடுத்துள்ளார்.

தெரசா மேயின் கட்சியினரே அவருடைய பிரெகிச்ட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதை அவர் கிடப்பில் போட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இங்கிலாந்து மக்களவை தலைவரான ஆண்ட்ரியா லீட்சன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து தெரசா மே சார்ந்துள்ள கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும் வெளியேறவுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் தெரசா மே தனது பிரெக்சிட் தொடர்பான ஒப்பந்தத்தை கைவிடவுள்ளதாகவும், அதனால் அவர் பதவி விலகும் அறிவிப்பு வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற தவறியதாக கூறி, இங்கிலாந்து பிரதமர் பதவியை வரும் ஜூன் 7ல் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் மக்களவையில் பிரெக்சிட் விவகாரத்தில் ஒப்புதல் பெற முடியாததால் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளதாக் தெரசா மே தெரிவித்துள்ளார்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!