இன்னும் 5 சீட் வேணுமே… காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அம்போ..!


லோக்சபா தேர்தலில் 50 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களைக் கைப்பற்றியது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு மொத்தம் 55 இடங்கள் தேவை.

இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறிகொடுத்தது காங்கிரஸ். தற்போதைய தேர்தலில் தொடக்கத்தில் காங்கிரஸ் 55, 60 இடங்கள் என முன்னிலை வகித்து வந்தது. தற்போது 50 இடங்களில்தான் முன்னிலை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்கு இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

லோக்சபாவில் 3-வது மிகப் பெரிய கட்சியாக திமுகவும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸும் உருவெடுத்துள்ளன. கடந்த முறை அதிமுக 3-வது மிகப் பெரிய கட்சியாக லோக்சபாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!