நீங்கள் சாதித்துவிட்டீர்கள் – பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்..!


பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 348 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 90 இடங்களில் முன்னிலை. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மோடிக்கு ரஜினி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மதிப்பிற்குரிய மோடிக்கு என இதயம் கனிந்த வாழ்த்துக்கள், நீங்கள் சாதித்துவிட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.-Source: thandoraa

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!