குழந்தை பிறக்காததால் ஆத்திரம்! மனைவிக்கு கணவனால் நேர்ந்த விபரீதம்!


குழந்தை பிறக்காததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கழுத்து நெரித்துக் கொன்றார்.

மும்பையில் உள்ள அன்டாப் ஹில் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் சபர்வால் (34), இவரது மனைவி சுப்ரியா (34). இவர்களுக்கு 2010ம் ஆண்டு திருமணமானது. கடந்த 9 ஆண்டுகளாக, இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், ஏப்ரல் 7ம் தேதியன்று, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அப்போது, சுப்ரியா படுக்கை அறைக்குள் சென்று, கதவை தாழிட்டுக் கொண்டதாகவும், நீண்ட நேரம் கழித்தும் அவர் வெளியே வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கதவை உடைத்து, நரேஷ் பார்த்தபோது, சுப்ரியா ஃபேனில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

ஆனால், போலீஸ் விசாரணையில், நரேஷ்தான், கழுத்தை நெரித்து சுப்ரியாவை கொன்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. குழந்தை பெற்று தராததால், ஆத்திரமடைந்து, மனைவியை அவர் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!