கர்ப்பமானது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த 20 வயது இளம் பெண்! எப்படி தெரியுமா?


தன் வயிற்றில் கரு வளர்வதே தெரியாமல், 20 வயது பெண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

20 வயதாகும் அந்த பெண்ணின் பெயர் ஸ்டாஸி போர்ட்டர். தனியார் டிராவல் ஏஜென்சி ஒன்றில், உதவியாளராகப் பணிபுரியும் அவர், திடீரென ஒருநாள் அலுவலகத்தில் வயிற்று வலி ஏற்பட்டு, பாத்ரூம் சென்றிருக்கிறார். அப்போது, அவரது வயிற்றில் இருந்து எந்த தொல்லையும் இன்றி குழந்தை பிறந்துள்ளது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார்.

உடனே தனது பார்ட்னர் டேவிட்டுக்கு ஃபோன் அடித்தார். ஆனால், டேவிட் உறங்கிவிட்டார். பிறகு அவர் கண்விழித்தபோது, ஸ்டாஸியிடம் இருந்து 60 மிஸ்டு கால்கள் வந்திருந்தன. இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர், உடனே ஆபிஸ்க்கு ஓடினார். அங்கே, அழகான பெண் குழந்தையை ஸ்டாஸி காட்ட, டேவிட் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்.

இதுபற்றி இவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அத்துடன், தனக்கு எந்த வயிற்று வலியோ, வீக்கமோ ஏற்படவில்லை. திடீரென முழு அளவில் வளர்ந்த குழந்தை பிறந்தது, வியப்பாக உள்ளதாக, ஸ்டாஸி போர்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!