ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர் பரிதாபமாக மரணம்… கொலையா..?


சென்னையில் பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷணன். நீச்சல் வீரரான இவர், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார். குறிப்பாக கடந்த 2010ம் ஆண்டு நடந்த தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தார்.

அமெரிக்காவில் பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன், சில தினங்களுக்கு முன்பு விடுமுறையை கழிக்க சென்னை வந்துள்ளார். நேற்று இரவு அரும்பாக்கத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற காங்கிரீட் கலக்கும் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் நிகழ்விடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மரூத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே கடந்த 2010ல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருந்தவர் பாலகிருஷ்ணனை அப்போது சிலர் பயங்கரமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. அந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் இப்போது நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் விபத்தில் நேற்று உயிரிழந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!