கொழும்பில் காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்..!


கொழும்பின் புறநபர் பகுதியான வத்தளையில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வத்தளை – ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, சந்தேகத்திற்கிடமாக காரை நோக்கி கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர், 34 வயதான ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!