ஒரு வருட காதல்.. ஆண்குழந்தைக்கு தந்தையான 5ம் வகுப்பு மாணவன்..!


நேபாளத்தில் தடிங் மாவட்டத்தின் ரூபே பள்ளத்தாக்கு பகுதியில் 5ம்வகுப்பு படித்து வரும் மாணவன் ரமேஷ் தமங் (வயது 13). இவனுக்கு பபித்ரா தமங் (வயது 14) என்ற மாணவியுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இதன்பின் பபித்ரா பள்ளி படிப்பினை கைவிட்டு விட்டார். ஆனால் இவர்களது காதல் தொடர்ந்தது. ஒரு வருட காதலில், கடந்த 2 மாதங்களுக்கு முன் பபித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தை ஆரோக்கியமுடன் உள்ளது. ஆனால் குழந்தையின் இரு கைகளிலும் நடு விரல்கள் இல்லை. இந்த தகவல் பரவிய நிலையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அவர்களை அணுகி பேசியுள்ளனர்.

இந்த தம்பதி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நேபாள நாட்டு சட்டத்தின்படி ஆண் மற்றும் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்சம் 20 வயது ஆக வேண்டும். இதனால் இந்த தம்பதி தங்களது திருமணம் மற்றும் குழந்தை பிறப்பினை பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அவர்களின் திருமணத்தினை எப்படி பதிவு செய்வது என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். தமங் சமூகத்தில், ஒரு ஆண் மனைவியாக ஒரு பெண்ணை நினைத்து விட்டால் பின்னர் மணந்து கொள்ளலாம்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!