பெண்கள் சிறுநீர்த்தொற்று வராம இருக்க எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?


கோடைகாலம் வந்துட்டாலே போதும் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்து விடுவார்கள். இந்த வெயில் காலத்தில் பீச், ஜஸ் க்ரீம் மற்றும் நீச்சல் குளம் என்று எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதும். இப்படி கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வியர்க்குரு, சிறுநீரக பாதை தொற்று போன்ற பாதிப்புகளும் இந்த சீசனில் அதிகம்.

ஓபன் ஃபோரம் தொற்று நாளிதழ்படி கோடைகாலத்தில் மக்கள் அதிகமாக சிறுநீரக பாதைத் தொற்றை அடைகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களை விட அதிகமாக பாதிப்படைகின்றனர். இளவயது பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு கோடை காலத்தில் அடிக்கடி சிறுநீரக பாதை தொற்று ஏற்படுகிறது. இதுகுறித்து நிறைய ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளன. இப்படி கோடை காலத்தில் அதிகமாக பாதிக்கும் சிறுநீரக தொற்றை விரட்ட ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

சிறுநீரகப்பாதை தொற்று என்றால் என்ன?
இந்த சிறுநீரக பாதை தொற்று சிறுநீர்ப்பை, சிறுநீரகம், யூரித்ரா மற்றும் யூரிட்டர்ஸ் போன்ற பல உறுப்புகளை தொற்றுக்கு உள்ளாக்குகிறது. எஸ்சிரிச்சியா கோலை என்ற பாக்டீரியா சிறுநீரக பாதை தொற்றை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்
சிறுநீர் கழிக்க அவசரம்
வலியுடன் சிறுநீர் கழித்தல்
நுரையுடன் சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கெட்ட துர்நாற்றம் அடித்தல்
இடுப்பில் வலி

50-60% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சிறுநீர் பாதை தொற்றை சந்திக்கின்றனர். மாதவிடாய் தள்ளிப் போகும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால் சிறுநீரக பாதை தொற்று ஏற்படுகிறது. இடுப்பு செயலிழப்பு, டயாபெட்டிக், யோனி பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியா (லாக்டோபேசில்ஸ்) இழப்பு, வெளிப்புற யூரித்ரா பகுதியில் ஏற்படும் எஎஸ்சிரிச்சியா கோலை பாக்டீரியா தொற்று போன்ற பாதிப்புகளும் ஏற்படும். ஏன் வெயில் காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

வெயில் காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த காரணமே சிறுநீர் பாதைத் தொற்று ஏற்பட வழிவகை செய்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வெளியேயே பெரும்பாலும் சுற்றித் திரிவதால் உடம்பிற்குப் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் தொற்று ஏற்படுகிறது.
பெண்களின் யூரித்ரா பகுதி சிறிய நீளம் கொண்டு இருப்பதால் எளிதாக பாக்டீரியாக்கள் சிறுநீரக பாதை வரை சென்று விடுகிறது.

நிறைய தண்ணீர் குடியுங்கள். பாக்டீரியா எல்லாம் கழுவி சுத்தம் செய்து வெளியேற்றப்பட்டு விடும். ஜெஏஎம்ஏ என்ற நாளிதழ் வெளியிட்ட படி பெண்கள் தினசரி 1.5 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் சிறுநீர் பாதை தொற்றை பாதியாக குறைத்து விடலாம். அதிகமாக தண்ணீர் பருகும் போது மூன்று விதமான பயன்கள் நமக்கு கிடைக்கிறது.

குறைந்தளவு பாக்டீரியா மட்டுமே சிறுநீர் பாதையை தாக்கும்.
சிறுநீரகப் பாதையை தொற்றக் கூடிய வாய்ப்பை குறைக்கும்.

குறிப்பு : கார்பனேட்டேடு குளிர்பானங்களை தவிருங்கள். டீ, காபி போன்றவற்றை தவிருங்கள்.


விமானப் பயணத்தின் போது தண்ணீர் குறைவாகவே பருக நேரிடும். கார்பனேட்டேடு பானங்கள், ஆல்கஹால் போன்றவை மட்டுமே விமானத்தில் கொடுக்கப்படும். இந்த இரண்டு குளிர்பானங்களிலும் சர்க்கரை இருப்பதால் சிறுநீர் பாதையின் pH அளவை அதிகரிக்கிறது. இதுவே பாக்டீரியா அங்கு தொற்ற காரணமாக அமைகிறது.
எனவே விமான பயணத்தின் போது அதிகமாக தண்ணீர் பருகுங்கள்.

பெண்களுக்கு உடலுறுவும் சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது. யூராலஜி ஹேர் பவுண்டேஷன் கருத்துப் படி செக்ஸ் ரீதியாகவும் பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது. எனவே உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிப்பது பாக்டீரியாக்களை வெளியேற்றி விடும்.

கோடை காலத்தில் நீச்சல் குளமும் சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது. ஏனெனில் நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்தல், குளோரின் குறைவாக இருத்தல், நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன் குளிக்காமல் இறங்குதல், இது போன்ற செயல்கள் தொற்றை ஏற்படுத்த காரணமாக அமைகிறது என்று யூராலஜி ஹேர் பவுண்டேஷன் கூறுகிறது.

பாக்டீரியா ஈரமான பகுதிகளில் வேகமாக பரவக் கூடியது. எனவே விரைவாக குளித்தவுடன் ஈரமான உடைகளை மாற்றி விடுங்கள்.

வெஜினா பகுதியில் முன்னோக்கி முதலில் துடைத்து விட்டு பிறகு பின்னோக்கி நன்றாக துடையுங்கள். இது பாக்டீரியா உள் நுழைவதை தடுக்கும்.

குளிர்த்த உடன் உடனடியாக ஈரமான துணிகளை மாற்றி விடுங்கள்.

நன்றாக தண்ணீர் குடித்து உடம்பை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.-Source: boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!