ரெமோவின் மகளுக்கு பிடித்த நடிகர், நடிகை யார் தெரியுமா?


கல்லூரி மேடைகளில் மிமிக்ரி செய்யும் கலைஞாக தோன்றி, பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளராக சேர்ந்து தன்னுடைய வித்தியாசமான தொகுத்து வழங்கும் முறையின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன்.

பிறகு, மெரீனா என்ற தமிழ்ப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சிவகார்த்திகேயன் படத்தால் நல்ல வசூலை தாண்டி நல்ல லாபம் கிடைக்கிறது என்று கூறினார்கள்.

தற்போது, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் பிரபல வானொலியின் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவா தன்னுடைய குழந்தை ஆராத்யா குறித்த சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறிய தகவலின் படி, ஆரத்யாவுக்கு நடிகைகளில் நயன்தாரா என்றால் அவ்வளவு பிடிக்குமாம். மேலும், பிடித்த ஹீரோ யாரென்று கேட்டால் அது அவரது அப்பா சிவகார்த்திகேயன் தானாம். – Source: thecineflix

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!