10 ஆண்டு அமைதிக்கு பின் குண்டுவெடிப்பு.. இலங்கையில் இறுதி போருக்கு பின் மிகப்பெரிய தாக்குதல்!

இலங்கையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுவெடித்த காரணத்தால் தற்போது அங்கு பெரிய அளவில் பதற்றம் நிலவி வருகிறது.

இலங்கைக்கு இன்று கருப்பு ஞாயிறு என்றுதான் சொல்ல வேண்டும். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட சென்ற மக்கள் பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி இருக்கிறார்கள்.


இலங்கையில் இன்று காலை மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

முதலில் இரண்டு சர்ச்களில் கொழும்பில் இந்த தாக்குதல் நடந்தது. அதன்பின் வரிசையாக இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடித்தது. தாக்குதல் நடந்த 6 இடங்களும் மிக மிக அருகில் இருக்கும் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6 இடங்களும் கொழும்பில்தான் அமைந்து இருக்கிறது.

மொத்தம் ஆறு இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச்,மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இலங்கையில் நடந்த இறுதி போருக்கு பின் அந்நாட்டில் கொஞ்சம் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று அங்கு ஆறு இடங்களில் குண்டுவெடித்து இருக்கிறது. அந்த இறுதி போருக்கு பின் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.

வெடிக்கப்பட்ட குண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இது எப்படி கொண்டு வரப்பட்டது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை- Source: oneindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.