“திமுக, அதிமுக இந்த ரெண்டு கட்சியை நான் ஆட்டிப்படைப்பேன் – வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்


வாக்களிக்கும் போது வைக்கும் மை, வெறும் மை அல்ல, அது நம் உரிமை என்று இயக்குநரும், நடிகருமான சகலகலா வல்லவன் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தன் கட்சியை பட்டி, டிங்கரிங் பார்த்து புதுப்பித்த டி.ராஜேந்தர், சில தினங்களுக்கு முன்பு தன் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்ப மனுவை பெற்றார்.

அப்போது பேசியபோது, “திமுக, அதிமுக இந்த ரெண்டு கட்சியை நான் ஆட்டிப்படைப்பேன். நாங்க ஒன்னும் ஜெயிக்கறதுக்காக நிற்கவில்லை. ஒருசிலர் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம்.

100 ஓட்டுக்களையாவது சிதற வைப்பதற்கு என்கிட்ட பலம் இருக்கு. இயங்கிக் கொண்டிருந்தால்தான் அது இயக்கம், கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம் என்று போட்டு தாக்கி பேசினார்.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவில் டி.ராஜேந்தர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாம ஒருத்தருக்கு ஓட்டு போட்டால், இன்னொரு கட்சியில் உள்ளவருக்கு போய் அந்த ஓட்டு சேருகிறது. அப்படியான முறையே இன்னும் இந்த இந்தியாவில் இருக்கிறது.

அமெரிக்கா மாதிரி ஏன் இன்னும் இங்கே வாக்கு எந்திரப்பதிவு முறை கொண்டுவரப்படவில்லை? தேர்தல் ஆணையத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால் வாக்களிக்கும் போது வைக்கும் மை, வெறும் மை அல்ல, அது நம் உரிமை. என் மகன் சிம்பு, இங்கு இருந்திருந்தால் கண்டிப்பாக ஓட்டுப்போட வந்திருப்பார். ஆனால் லண்டனில் இருக்கிறார். அதனால்தான் ஓட்டுப்போட வரமுடியவில்லை” என்றார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!