அமெரிக்காவையே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்த அந்த 90 வயது முதியவரின் செயல்…!


அமெரிக்காவில் புயலால் பியூர்டாரிகோ தீவில் இருந்து அனைவரும் வெளியேறிய நிலையில், 90 வயது முதியவர் மட்டும் அங்கு தனியாக வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்கா அருகே உள்ள மிகச்சிறிய தீவு பியூர்டாரிகோ. இங்கு கடந்த சில மாதங்காளக மாறி மாறி புயல் வீசுகிறது. தற்போது அங்கு முக்காள்வாசி தீவு அழிந்து விட்டது.

தொடக்கத்தில் அங்கு இர்மாபுயல் வீசியது. எனவே அங்கு அமெரிக்கா அவசரநிலை பிரகடனப்படுத்தியது. தற்போது மரியா புயல் வீசியது. இதனால் அங்கு 1500 பேர் இறந்தனர்.

90 சதவீத கட்டிடங்கள் இடிந்து விட்ட நிலையில் தீவு மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கிருந்து ஏராளமானோர் வெளியேறி விட்டனர். இவர்கள் அனைவரும் நியூயார்க், கலிபோர்னியா.

பென்சில்லேனியா பகுதிகளில் குடியேறி விட்டனர். இந்த நிலையில் பியூர் பாரிகோவிலில் இருந்து வெளியேற அலிஜான்ரோ என்ற 90 வயது முதியவர் மறுத்து விட்டார். எங்கும் செல்லாமல் அங்கேயே வாழ்கிறார்.

முன்னதாக அனைவருடனும் வெளியேறி பென்சில் வேனியா சென்றார். ஆனால் அங்கு இருக்க பிடிக்காமல் மீண்டும் பியூர்பாரிகோ தீவுக்கே திரும்பி விட்டார். இவரைப்போன்று சில அரசு அதிகாரிகளும் அங்கு உள்ளனர்.

கடந்த 8 நாட்களாக அங்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லை. ஆனால் தனியாக வாழும் தாத்தா அலிஜான்ரோ எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது ஊர் பாசம் அமெரிக்கா முழுவதும் வைரசாக பரவி வருகிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!