அண்ணன் கண் முன் தங்கைக்கு நேர்ந்த கொடூரம் -சேலம் அருகே நடந்த பரிதாபம்.!


சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் சையது ரஃபிக் ஜக்ரியா. சவுதியில் வேலை பார்த்துவரும் இவர் தற்போது விடுமுறையில் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஊருக்கு வந்துள்ளார்.

இவரின் இளைய மகள் ஆயிஷா சுஹைனா தனது வீட்டின் அருகில் இயங்கி வரும் தாரூஸ் சலாம் எனும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.ஆயிஷாவை எப்போதும் அவரது சகோதரர் தான் பள்ளிக்கு கூட்டிச்சென்று விடுவது வழக்கம்.அந்தவகையில் இன்று காலை வழக்கம் போல் ஆயிஷாவை அவரது சகோதரர் பள்ளிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.பள்ளியின் நுழைவு வாயிலியில் ஆயிஷாவை இறக்கி விட்டுவிட்டு ஆயிஷா வகுப்பறைககு செல்லும் வரை காத்திருப்பது வழக்கம்.

சிறுமி ஆயிஷா தன் வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது அந்த பள்ளியின் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்து பின்னோக்கி வந்து கொண்டிருந்தது. அதை அறியாத சிறுமி அவர் வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அப்போது பின்னோக்கி வந்த பேருந்து நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக சிறுமி ஆயிஷாவின் மீது மோதியது.பேருந்து மோதிய வேகத்தில் அதன் பின்புற சக்கரத்தில் சிக்கிக்கொண்ட சிறுமி ஆயிஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கோர கட்சியினை கண்ட அவரது சகோதரன், தன் கண்முன்பே தனது தங்கை விபத்தில் இறந்ததை கண்டு கதறி அழுதார்.இந்நிலையில் சம்பவம் குறித்து புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.பள்ளி வளாகத்தில் அண்ணனின் கண்முன்பே தங்கை உயிரிழந்த சம்பவம்அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!