இரட்டையர்களின் பழிவாங்கல் கதை – நாயக் விமர்சனம்..!


நடிகர் ராம்சரண் தேஜா
நடிகை காஜல் அகர்வால்
இயக்குனர் வி.வி.விநாயக்
இசை தமன்
ஓளிப்பதிவு சோட்டா கே.நாயுடு
திரைப்பட போக்கு…

நாயகன் ராம் சரண் ரகசியமாக சிலரை கொலை செய்து வருகிறார். இதற்கிடையே நாயகி காஜல் அகர்வாலை பார்க்கும் ராம் சரணுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறார். உள்ளூர் ரவுடியும், காஜல் அகர்வாலின் அண்ணணுமான ராகுல் தேவ் தனது தங்கை பின்னால் சுற்றும் ராம் சரணை கொல்ல திட்டமிடுகிறார்.

இந்த நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரை ராம் சரண் கொலை செய்வதை பார்த்து ராகுல் தேவ் மிரண்டுபோகிறார். இதையடுத்து ராம் சரண் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். அதில் ராம் சரண் இரட்டையர் என்பது தெரிய வருகிறது. இந்த வழக்கை ஆசிஷ் வித்யார்த்தி விசாரிக்க, கடைசியில் ராம் சரண் செய்யும் கொலைகளுக்கான காரணம் என்ன? ராம் சரண் – காஜல் அகர்வால் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.


ராம் சரண் ஆக்‌ஷன், காதல் என அதளகளப்படுத்தியிருக்கிறார். காஜல் அகர்வால், அமலாபால் என இருவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்தாலும், ஒரு பாடலில் மட்டும் நடனமாடி செல்லும் சார்மி ரசிக்க வைத்திருக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடி படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. ராகுல் தேவ், ஆசிஷ் வித்யார்த்தி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான பழிவாங்கல் கதையை கதைக்களமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் வி.வி.விநாயக். தற்போது பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தினாலும், படம் ரிலீசான நேரத்தில் வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை உணர முடிகிறது.

சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவு அற்புதம். தமனின் இசை படத்திற்கு பலம் தான். பாடல்கள் சுமார் ரகம்.

மொத்தத்தில் `நாயக்’ அதிரடி இல்லை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!