மனைவியை எதிர்ப்போர் சங்கம்’ எம்பி., வேட்பாளரின் தெறிக்கவிடும் வாக்குறுதி!


‘மனைவியை எதிர்ப்போர் சங்கம்’ என்ற சங்கத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர் தசரத் தேவ்தா.

இவரது சங்கத்தில் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் சங்கதலைவர் தேவ்தா இறங்கியுள்ளார். அகமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்குகிறார் தேவ்தா.

மனைவியாலும் அவரின் உறவினர்களாலும் பாதிக்கப்பட்ட கணவர்களின் நலனை பாதுகாப்பதே தனது நோக்கம் என்று தேவ்தா கூறியுள்ளார். மேலும் கணவர்களை துன்புறுத்தும் மனைவிகளுக்கு சட்டப்பிரிவு 498 உதவுவதாகவும் , தான் எம்பி ஆனால் இதை திருத்த குரல் கொடுக்கப் போவதாகவும் தேவ்தா கூறியுள்ளார். அதற்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

தேர்தலில் தேவ்தா போட்டியிடுவது இது முதல்முறை அல்ல. 2014 மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கூட போட்டியிட்டுள்ளார். இதே வாக்குறுதியை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இவர் 2 ஆயிரத்து 300 வாக்குகளை பெற்றார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!