இந்த மாதிரியான விளம்பரங்களை இரவு 10 மணிக்குப் பின்தான் டீவிகளில் காட்டலாம் – மத்திய அரசு!


தொலைக்காட்சிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான இரவு நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரங்களை காட்ட வேண்டும் என்று மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆணுறை விளம்பரங்கள் சிறுவர் – சிறுமிகள் மனதில் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

எனவே அத்தகைய ஆணுறை விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் மிகவும் அநாகரீகமாக இருப்பதாக புகார்கள் கூறப்பட்டன. இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று அந்த அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான இரவு நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரங்களை காட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஆணுறை விளம்பரங்களை தயாரிக்க புதிய விதிமுறைகளையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

அதன்படி “குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஆணுறை விளம்பர காட்சிகள் அமையக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

“ஆணுறை விளம்பரங்கள் குழந்தைகள் மத்தியில் எந்த ஒரு ஆர்வத்தையும் உருவாக்கி விடக்கூடாது” என்று மத்திய அரசு உறுதிப்பட கூறி உள்ளது.

இதையடுத்து ஆணுறை விளம்பர தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுயக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!