போனில் பேசிய அபிநந்தனிடம் அவரது மனைவி “இந்த” கேள்வியையா கேட்டார்..?


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்., எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

மறுநாள் பாக்., விமானப்படை விமானம் இந்தியா எல்லைக்குள் நுழைந்தது. இந்த விமானத்தை இந்திய விமானப்படை விமானிகள் சுட்டு வீழ்த்தினர். தொடர்ந்து பாக்., எல்லைக்குள் இந்தியா விமானம் ராணுவ விமானம் நுழைந்தது. அந்த விமானத்தை, பாக்., ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானி அபிநந்தன் பாக்., ராணுவத்தினரிடம் சிக்கி கொண்டார்.

பாக்., ராணுவத்தினரிடம் அபிநந்தன் இருக்கும் வீடியோகள் அப்பொழுது வெளியாகி பெரும் வைரலாக பரவியது. இரண்டு நாட்களில் பாக்., அரசு அவரை விடுவித்தது.

இதற்கிடையில் அபிநந்தன் பாகிஸ்தானில் இருக்கும் போது தனது மனைவியிடம் போனில் பேசியதாக தற்போது “தி பிரிண்ட்” என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின்படி பாக்., ராணுவ கட்டுப்பாட்டில் அபிநந்தன் இருக்கும் போது பாக்., ராணுவ வீரர் ஒருவர் தனது செல்போனை அபிநந்தனிடம் கொடுத்து தனது மனைவிக்கு போன் செய்ய சொல்லியுள்ளார்.

அபிநந்தனும் தனது மனைவி தன்விக்கு போன் செய்துள்ளார். பேசுவது தனது கணவன் அபிநந்தன் என உணர்ந்த தன்வி எந்த பதட்டமும் இல்லாமல் பேசியுள்ளார். அவர்கள் பேசியது உரையாடலாக:

தன்வி : நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று குழந்தைகள் கேட்டால் நான் என்ன சொல்ல வேண்டும்?

அபிநந்தன்: நான் ஜெயிலில் இருக்கிறேன் என்று சொல்

தன்வி: அவர்கள் கொடுத்த டீ எப்படி இருந்தது.

அபிநந்தன் : நன்றாக இருந்தது.

தன்வி: நான் போடும் டீயை விட நன்றாக இருந்ததா?

அபிநந்தன்: ஆமாம் சிறந்ததாக இருந்தது… (சிரித்துக்கொண்டே)

தன்வி: அப்படி என்றால் அதை எப்படி செய்ய வேண்டும் என கேட்டு தெரிந்து கொண்டு வாங்க…

இவ்வாறாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. பாக்., வீரர் ஏன் அபிநந்தனின் மனைவிக்கு போன் செய்ய தன் செல்போனை அபிநந்தனுக்கு கொடுத்தார் என்ற விஷயம் தெளிவாக குறிப்பிடவில்லை. இந்த தகவல்கள் எல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரியுமா? என்பது குறித்தும் தகவல்கள் இல்லை.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!