சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முன் பெண்ணுக்கு நடந்த திருமணம்..!


அமெரிக்காவில் சவுத் பென்ட் நகர மேயர் முன்னிலையில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முன் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் சவுத் பென்ட் நகர பகுதியை சேர்ந்தவர்கள் மேரி, காபே. இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் நெருங்கி உறவாடியதில் மேரி கர்ப்பம் அடைந்தார். அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலம்தான் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறினர்.

இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பி சவுத் பென்ட் நகர மேயர் பீட் பட்டிஜிக்கை நாடினர். அவர் உடனடியாக அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து நடத்திவைத்தார்.

அதன்பின்னர் மேரி மருத்துவமனை சென்றார். அங்கு அவருக்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டாக்டர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தனர். அதன்மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஜேட் கேதரின் ஜோன்ஸ் என பெயரிட்டுள்ளனர்.

இதை மேயர் பீட் பட்டிஜிக் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இவர், அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் போட்டியில் களம் இறங்கி உள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!