கோவை சிறுமி கொலையில் சந்தோஷ்குமார் சிக்கியது எப்படி..? திகில் பின்னணி..!


கோவை துடியலூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் சந்தோஷ் குமார் என்ற இளைஞரை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் வசித்து வந்த கூலி தொழிலாளியின் மகள் தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி. இவர் கடந்த 25ஆம் தேதி திடீரென மாயமானார். இதனை தொடர்ந்து 26 ஆம் தேதி காலை அவர் வீட்டு அருகே சடலமாக இருந்ததை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமிக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து 14 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீசார். இதில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் சுமார் 18 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தோஷ் குமார் என்ற 32 வயது இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டு உள்ளார். இவர் எப்படி சிக்கினார் என்றால் சிறுமியின் சடலத்தை சந்தோஷ் குமார் வீட்டில் வைத்திருந்த டி-ஷர்ட்டை கொண்டு சடலத்தை மூடி சிறுமியின் வீட்டு அருகே வீசி சென்று உள்ளார். தீவிர விசாரணையின் முடிவிலேயே அந்த டிஷர்ட் சந்தோஷ்குமார் உடையது என்பதை உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கூலி வேலைக்கு சென்று வேலை செய்து வரும் சந்தோஷ் குமாருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுள்ளார். தனிமையில் வசித்து வந்த சந்தோஷ்குமார் அவருடைய அவருடைய பாட்டியான அய்யம்மாள் என்பவரின் வீட்டில் அடிக்கடி தங்குவார்.


ஒரு கட்டத்தில் தன் பாட்டி உடனே வசித்து வந்த சந்தோஷ் குமார் பாட்டியின் வீட்டருகே இருந்த இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 25ஆம் தேதி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பேசி தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை கொடுத்து அவரை கொலை செய்துள்ளார். அன்றைய தினமே உடல்நலக் குறைவாக இருந்த பாட்டி அய்யம்மாள் உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க வே அப்போது மறைத்து வைத்திருந்த சிறுமியின் உடலை கொண்டு வந்து சிறுமியின் வீட்டருகே வீசி விட்டு சென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக சிறுமியை தேடி அவரது பெற்றோர்கள் அலைந்த போது அவர்களுடன் எதுவும் தெரியாதது போல சிறுமியை தேடி வந்துள்ளார் இந்த சந்தோஷ்குமார். இவ்வாறாக அனைவரையும் ஏமாற வைத்து தான் நல்லவன் போல் வேஷம் பூண்டுள்ளார் சந்தோஷ். அவருடைய டி-ஷர்ட் ஒன்றை மட்டும் வைத்து குற்றவாளி சந்தோஷ் குமார் தான் என போலீசார் முடிவு செய்தனர்.

சந்தோஷ்குமாரின் இப்படி ஒரு வன்மையான செயலுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்டன குரல் எழுப்பி உள்ளது. இதற்கெல்லாம் எப்போது தான் தீர்வு கிடைக்குமா என்ன பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!