தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல்நல குறைவால் காலமானார்..!


தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் என். செல்வராஜ் (வயது 75). கடந்த 1944ம் ஆண்டு பிறந்த இவர் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

திருச்சி மாவட்ட தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 1980ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தி.மு.க. சார்பில் 2006ம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

கடந்த 2016ல் இவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார். இவரது உடல்நிலை இன்று மோசமடைந்த நிலையில் உயிரிழந்து விட்டார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!