பசிபிக் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட டெல்லி மாணவி கடலில் பரிதாபமாக பலி!


பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்நாட்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போட்டிகளில் 15 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்திய சார்பில் 120 பள்ளி மாணவ, மாணவியர் ஹாக்கி, கால்பந்து உட்பட ஆறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். போட்டிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் அனைவரும் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது 5 மாணவிகள் அலைகளில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.


இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு நான்கு மாணவிகளை உயிருடன் மீட்டனர். இருப்பினும் சிறுமிகளுக்கு இடையேயான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவியான நிதிஷா நேகி(15) என்பவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அலைகளால் அடித்து செல்லப்பட்ட மாணவியின் சடலம் பாறைகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற இடத்தில் பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!