ஜெயலலிதா மரணத்திற்கு காரணமே ராமதாஸ்தான்.. புத்தகம் போடப் போகும் அமமுக.. புது பரபரப்பு!


மறைந்த ஜெயலலிதா மரணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்தான் காரணம் என்று கூறி புத்தகம் வெளியிடப்போகுகிறதாம் அமமுக.

அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை திமுக விமர்சிக்கிறதோ இல்லையோ தினகரன் தலைமையில் இயங்கும் அமமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்த தேர்தலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தாமல் எஸ் டி பி ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்துள்ள அக்கட்சி நாங்கள் மூன்றாவது அணி அல்ல முதல் அணியே நாங்கள்தான் என்றும் அடுத்த பிரதமரை தீர்மானிக்கப் போவது நாங்கள்தான் என்றும் தேர்தலுக்கு பிறகு பிரதமரை நாங்கள் தீர்மானிக்க டெல்லிக்கு செள்ளவிருப்பதைத்தான் அதிமுக அமைச்சர்கள் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் காணமல் போய்விடுவோம் என்று கூறி வருவதாகவும் சிரிக்காமல் கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில் அக்கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஒரு படி மேலே சென்று தேர்தல் நேரத்தில் அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது குறித்தும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் ராமதாஸ்தான் என்பது குறித்தும் புத்தககம் வெளியிடுவோம் என்று கூறி பீதியை கிளப்பியிருக்கிறார்.

தஞ்சாவூரில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது ஆகவே குக்கர் சின்னத்தை பெறுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஜெயலலிதா வெற்றி பெற்ற 37 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர் அதிமுக கூட்டணியில் பணத்தை வைத்து விளையாடுகிறார்கள். பாமகவுக்கு கூட்டணிக்காக 500 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது, தேமுதிகவுக்கு 500 கோடி பேரம் இன்னமும் முடிவடையவில்லை.

தங்களது ஸ்லீப்பர் செல்கள் தேர்தலுக்கு பின்னர் தங்களது வேலைகளை செய்யத் துவங்குவார்கள் என்று அமமுகவின் வழக்கமான டயலாக்கையும் அவிழ்த்து விட்டார். அதன் பின்னர்தான் பீதியை கிளப்பினார் புகழேந்தி. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஜி.கே.மணியை பெங்களூருவுக்கு அனுப்பி மேல் முறையீடு செய்ய வைத்தது ராமதாஸ்தான்.

இப்படி ஜெயலலிதாவுக்கு எதிராக மேல் முறையீடு செய்து அவருக்கு மன உளைச்சலையும் தண்டனையும் வாங்கி கொடுத்தவர்களுடன் தான் அதிமுகவினர் இப்போது கூட்டணி வைத்துள்ளனர். இதை ஜெயலலிதாவின் ஆன்மாவே மன்னிக்காது என்றவர் தேர்தல் நேரத்தில் இந்த விவரங்களை வைத்து புத்தகமாக வெளியிடப் போகிறோம் என்று கூறினார்.

ஓ.. இதுதானா.. நல்லவேளை என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!