அடா சர்மாவின் கலக்கல் வீடியோ…’கயிற்றில் தொங்கியும் யோகா பண்ணலாம்’


நடிகை அடா சர்மா ‘மல்லகம்ப்’ என்ற கயிற்றில் தொங்கியபடி யோகா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை அடா சர்மா. தான் நடித்த அனைத்து படங்களிலும் படுகவர்ச்சியாக நடித்து இளைஞர்களை கிறங்கடித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘சார்லி சாப்ளின்-2’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் ‘கமாண்டோ 3’ மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இவரிடம் பல திறமைகள் கொட்டி கிடக்கின்றன. நடிப்பு மட்டமில்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவராக உள்ளார். தற்போது ‘மல்லகம்ப்’ எனும் விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ‘மல்லகம்ப்’ என்பது கயிற்றை உயரத்தில் கட்டி, அதில் நம் உடலை வளைத்தும் நெளித்தும் செய்யும் வித்தையே இந்த விளையாட்டு.

https://twitter.com/adah_sharma?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1094154651513937921&ref_url=http%3A%2F%2Ftamil.eenaduindia.com%2FEntertainment%2FKollywood%2F2019%2F03%2F09115839%2FAdah-Sharma-be-brave-and-believe-in-Magic.vpf
இந்த விளையாட்டில் கை தேர்ந்தவர் ‘அடா சர்மா’. அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் இந்த ‘மல்லகம்ப்’ பயிற்சி இடம் பெற்றிருந்தது. கயிற்றில் ஏறி அதையே படுக்கை போலாக்கி படுத்துக் காண்பிக்கிறார்.

விரைவில் ‘மல்லகம்ப்’ ஒலிம்பிக்ஸில் இடம்பெறவிருக்கிறது என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, சர்வதேச மகளிர் தினத்திற்காக, பெண்களுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டு மொட்டை மாடியில் உள்ள மரத்தில் கயிரை கட்டி அதில் தொங்கியபடி பல விதமான யோகா பயிற்சிகளை செய்கிறார். அடா சர்மாவின் மல்லகம்ப் பயிற்சி வீடியோ, சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!