தமிழ்நாட்டில் காரில் உலா வந்து பட்டுப் புடவைகள் திருடும் ஆந்திரா கும்பல்..!


தனியார் ஜவுளிக் கடையில் புடவைகள் வாங்குவதுபோல் நடித்து பட்டுப் புடவைகளை திருடிச்சென்ற ஆந்திராவைச் சேர்ந்த திருட்டு கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.

நேற்று மாலை சென்னை திருமங்கலம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு காரை சோதனை செய்தார்கள். அதில், மூன்று பெண்கள் ஒரு ஆண் இருந்தார்கள்.

அவர்களை விசாரித்ததில், தமிழ்நாட்டில் காரில் உலா வந்து பட்டுப் புடவைகள் திருடும் ஆந்திரா கும்பல் என்று தெரியவந்தது.

பின்னர் காவல் துறையினர் அவர்களை தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தமிழகம் முழுவதிலும் பல ஜவுளிக் கடைகளில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து பட்டுப் புடவைகள் திருடியுள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.

சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியர்களை திசை திருப்பி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 16 பட்டுப் புடவைகளை திருடிச் சென்றதை இவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

இந்நிலையில் திருமங்கலம் காவல் துறையினர் காரை பறிமுதல் செய்து
வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

இது குறித்து திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் வேல் முருகன் கூறுகையில், இக்கும்பலின் முக்கியக் குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரை பிடித்தால்தான் தமிழ்நாட்டில் எந்தெந்த இடத்தில் பட்டுப் புடவைகள் திருடினார்கள் என்ற விவரம் தெரியவரும் என்றார்.

பட்டுப் புடவைகள் திருடும் ஆந்திரா கும்பலை கைது செய்த திருமங்கலம் காவல் நிலைய காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பாரட்டியுள்ளார்.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!