பார்க்க சகிக்க முடியலை.. அதனால்தான் தனியாக நிற்கிறோம்.. சீமான் தாக்கு..!


எங்களையும் கூட்டணிக்கு கூப்பிட்டார்கள். சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கு தேவை எம்பிக்களும், எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவிகள் மட்டுமே மக்கள் பற்றி எந்த சிந்தனையும் கிடையாது. இதனை பார்த்து சகிக்கமுடியாமல் நாங்கள் எந்த இந்திய அரசியல் கட்சிகளுடனும், திராவிட அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காண்கின்றோம் என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சீமான் நெல்லை மாவட்டம் இலஞ்சியில் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது இடைவெளியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் களம் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாகப் பேசினார். அவரது பேட்டியிலிருந்து..

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது. தேர்தல் தேதி அறிவித்த பின்பு எங்கள் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இதில் 20 ஆண்கள் 20 பெண்கள் போட்டியிடுகின்றனர். பாலியல் வேறுபாடின்றி சமத்துவ முறையில் இந்த பட்டியல் எங்கள் கட்சியின் வேட்பாளர்தேர்வு முடிந்துள்ளது.

இந்தத் தேர்தலில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து போட்டியிடுகின்றன. இந்த அமைப்புகள் மீது நிறைய கேள்விகள் உள்ளன. அதனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வியாக எழுப்புவோம். நாட்டின் பாதுகாப்பு மாற்று அரசியல் இந்தத் தேர்தலில் வேறுபடுகின்றன. சந்தர்ப்பவாதங்கள் மட்டுமே கூட்டணியாக அமைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலில் இருந்தாலும் சந்தர்ப்பவாத கூட்டணி மட்டுமே இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக தான் எங்கள் கட்சி தனித்து போட்டியிடுகின்றது.

எங்களையும் கூட்டணிக்கு கூப்பிட்டார்கள். சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கு தேவை எம்பிக்களும், எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவிகள் மட்டுமே மக்கள் பற்றி எந்த சிந்தனையும் கிடையாது. இதனை பார்த்து சகிக்கமுடியாமல் நாங்கள் எந்த இந்திய அரசியல் கட்சிகளுடனும், திராவிட அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காண்கின்றோம். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர்களைப்பற்றி பேசவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை.


வருங்கால சந்ததிகளை முன்னேற்றம் வேண்டும், நேர்மையான பாதை உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து தான் எங்களுடைய எதிர்கால கண்ணோட்டம் அமைந்துள்ளது. தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கியது. இப் போது 2ஆயிரம் ரூபாய் நலிந்தோர்களுக்கு வழங்க உள்ளதாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளனர். இது அனைத்தும் தேர்தலை கருத்தில் கொண்டுதான்.

இதற்கு முன்னர் எந்த பொங்கலுக்கும்,தீபாவளிக்கும் அறிவித்தது இல்லையே. இதே போல மத்திய அரசும் விவசாயிகளுக்கு 6ஆயிரம் வழங்குகிறது. இது நலத்திட்டம் என்ற பெயரில் தேர்தலுக்காக மக்களுக்கு கொடுக்கும் வாக்குக்கு விலைதான். ராணுவத்திற்கு எதிராக பேசுவதாகச் சொல்கிறார்கள் எதிராக பேசுவில்லையே சாதாரண குடிமகனாக கேட்கிறேன். ராணுவத்தில் எங்கள் அமைப்பைச் சார்ந்தவரும் என் சகோதரர்களும் உள்ளனர். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இது போன்ற கோமாளித்தனமான சமாளிப்புபதில்களை சொல்லி வருகின்றார்கள்.

ராணுவ வீரர்கள் பலி ஆக்கப்பட்டனர். இது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டும் பதில் இல்லாத நிலை உள்ளது. கூடிய உறவு கட்டமைப்பின் லட்சணம் என்ன 1100 பேருக்கு மேல் ராணுவ வீரர்கள் சென்றால் விமானத்தில் செல்ல வேண்டும் என்கின்ற முறை இருந்தும் 2100 பேர் 70 பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டதின் நோக்கமென்ன..? 350 கிலோ வெடிபொருட்களை நமது எல்லைக்குள் நமது பகுதிக்கு கொண்டு வந்து தீவிரவாதி தாக்குதல் நடத்தினார்கள். இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததா..? இதில் என்ன குறைபாடு உள்ளது …இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என்னைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள்.

ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் மாணவ, மாணவிகளை படுத்திய பாடு அந்தக் சோதனையை இந்த எல்லைப்பகுதியில் நடத்தி இருந்தால் 40 வீரர்கள் பலியாகி இருக்க வாய்ப்பில்லை. என் நாட்டின் வீரனையே பாதுகாக்க முடியாத பாதுகாக்காத அரசு மக்களை எப்படி பாதுகாப்பார்கள். இந்த தீவிரவாத தாக்குதல் தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகமே என்று அவர் தெரிவித்தார் சீமான்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!