மசூர் அசாருக்கு சிறுநீரக கோளாறு – பாகிஸ்தான் அதிகாரிகள் தகவல்..!


ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (வயது 50) பாகிஸ்தானில் இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அவர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி குரோஷி தெரிவித்து இருந்தார்.

மசூத் அசார் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று கூறுகையில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ள மசூத் அசாருக்கு ராவல்பிண்டியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் தொடர் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

ஒசாமா பின்லேடனின் நெருங்கிய நண்பராக மசூத் அசார் இருந்தார். 1999–ம் ஆண்டு காந்தகாரில் இந்திய விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டியதால் இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை அவர் உருவாக்கினார். இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல், உரி மற்றும் பதான்கோட் ராணுவ முகாம் மீது தாக்குதல் உள்பட தற்போது நடந்த புல்வாமா தாக்குதல் வரை இந்த பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!